கல்லூரியில் இருந்து நீக்கிய 3 மாணவர்களை மீண்டும் சேர்க்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
கல்லூரியில் இருந்து நீக்கிய மாணவர்கள் 3 பேரை மீண்டும் சேர்க்கக்கோரி விடிய,விடிய மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் தெட்சிணாமூர்த்தி, பிரகாஷ், தினேஷ் ஆகிய 3 பேரும் கல்லூரியை செயல்படாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் தெட்சிணாமூர்த்தி, பிரகாஷ், தினேஷ் ஆகிய 3 பேரும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட 3 மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், பிரச்சினைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பாக மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்றுமுன்தினம் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விடிய,விடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட தெட்சிணாமூர்த்தி, பிரகாஷ், தினேஷ் உள்பட மாணவர்கள் தப்படித்து கலந்து கொண்டனர்.

Next Story