கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,
2011–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை மத்திய அரசின் பல்கலைக்கழக நிதி குழுவினரால் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும், முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் கல்லூரி வாசலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கல்லூரி மாணவர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையொட்டி நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:– கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு செய்த கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்–அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறைகேடு குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

Next Story