கூடுவாஞ்சேரியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
கூடுவாஞ்சேரி போலீசார் மீன் மார்க்கெட் பகுதியில், சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
வண்டலூர்,
ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவி(வயது45), இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி மீன்மார்க்கெட் அருகே நடந்து சென்றபோது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி தன்னிடம் இருந்த 1,080 ரூபாயை பறித்துச் சென்றதாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் மீன் மார்க்கெட் பகுதியில், சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ‘அவர்கள் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த சூர்யா(வயது19), ஆதனூரைச் சேர்ந்த பாலாஜி(32) என்பதும் அவர்கள் 2 பேரும் ரவியை கத்தியை காட்டி பணத்தை வழிப்பறி செய்ததும்’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story