சிவகாசியில் கண்மாயில் கொட்டப்பட்ட பட்டாசுகள்


சிவகாசியில் கண்மாயில் கொட்டப்பட்ட பட்டாசுகள்
x
தினத்தந்தி 1 April 2017 3:45 AM IST (Updated: 31 March 2017 6:54 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் சரவெடி பட்டாசுகள் மர்ம நபர்களால் கொட்டப்பட்டிருந்தது.

சிவகாசி,

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் சரவெடி பட்டாசுகள் மர்ம நபர்களால் கொட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சரவெடிகளை ஆய்வு செய்து அதன் வீரியத்தை குறைக்க தண்ணீரை அதன் மீது பீய்ச்சிஅடித்தனர். அதன் பின்பு நகராட்சி சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சரவெடி பட்டாசுகளை அகற்றி நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு சென்றனர். சரவெடி பட்டாசுகளை கண்மாயினுள் கொட்டியது யார்? என்பது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story