செல்போன் எண்ணிற்கு கடவுச்சொல் வந்தால் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பெறலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


செல்போன் எண்ணிற்கு கடவுச்சொல் வந்தால் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பெறலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 31 March 2017 7:24 PM IST)
t-max-icont-min-icon

செல்போன் எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் குறுஞ்செய்தியாக வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ரே‌ஷன்கடைக்கு

நாமக்கல்,

தமிழக அரசின் ஆணைப்படி, தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் இன்று (சனிக்கிழமை) முதல் அந்தந்த ரே‌ஷன் கடைகளிலேயே வழங்கப்பட உள்ளது. ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளின் வினியோகம் குறித்த விவரம் ரே‌ஷன்கார்டுதாரர்களின் செல்போன் எண்ணிற்கு ஒருமுறை கடவுச் சொல் குறுஞ்செய்தியாக வரும்.

அந்த குறுஞ்செய்தி வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய ரே‌ஷன்கார்டு மற்றும் குறுஞ்செய்தியுடன் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைக்கு சென்று குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல்லை விற்பனையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த கடவுச்சொல் 7 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரே‌ஷன்கடையில் உள்ள விற்பனையாளர் குடும்ப அட்டைதாரர் கொண்டு வரும் கடவுச் சொல்லை கடையில் உள்ள விற்பனை முனைய கருவியில் பதிவு செய்வார். அதன் பின்பு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு செயல்பாட்டிற்கு வரும்.

கால அவகாசம்

எனவே, குடும்ப அட்டைதாரர்கள் ரே‌ஷன் கடையில் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும். மேலும், ரே‌ஷன்கடையில் குடும்ப அட்டைகளுடன் செல்போன் எண்கள் மற்றும் ஆதார் எண்கள் பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், அது கிடைக்கும் வரை 2 மாதங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுகளையே பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால், அருகில் உள்ள அரசு பொது இ–சேவை மையங்களை அணுகி திருத்தம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story