அரக்கோணம் அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றிய அரசு பள்ளி மாணவர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
அரக்கோணம்,
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இச்சிபுத்தூர் பகுதியிலும், பள்ளி வளாக பகுதியிலும் ஆங்காங்கே முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றினார்கள்.
மாணவர்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் மாணவர்களுடன் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றினர்.
பள்ளி மாணவ, மாணவிகளின் செயலை பார்த்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெ.கண்ணகி, ரோட்டரி சங்க தலைவர் கே.பி.கே.பிரபாகரன், அரக்கோணம் டவுன் ஹால் சமூக நல பொறுப்பாளர் ஆர்.வெங்கடரமணன், தணிகைபோளூர் குட்டிபாபு ஆகியோர் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி பாராட்டினார்கள்.