குடியாத்தம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் மனு
குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இருப்பு பாதை எந்திர பணியாளர்கள் ஓய்வு
குடியாத்தம்,
குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இருப்பு பாதை எந்திர பணியாளர்கள் ஓய்வு அறையை தென்னக ரெயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் அனுபம்சர்மா, முதுநிலை கோட்ட பொறியாளர் சலம், கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து தென்னக ரெயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி குடியாத்தம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம், குடியாத்தம் ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், சங்க தலைவர் எம்.சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் ராஜேஷ்குமார், செயலாளர் கிஷோர்குமார், ரோட்டரி முன்னாள் தலைவர் டி.என்.ராஜேந்திரன் மற்றும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகியும், குடியாத்தம் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான ஆர்.கே.அன்பு ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், குடியாத்தம் ரெயில் நிலையத்தில் திருவனந்தபுரம், லால்பாக், கோவை, பிருந்தாவனம், வெஸ்ட்கோஸ்ட், காவேரி, கச்சேகுடா – மங்களூரு ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.