சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு வங்கிகள் நிதி வழங்க வேண்டும் கலெக்டர் விவேகானந்தன் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு வங்கிகள்
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், நபார்டு வங்கி மேலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:–
தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், பல்வேறு நீர்நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேவையான நிதியை வங்கிகள் தங்கள் சமூக பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க வேண்டும்.
விழிப்புணர்வு பதாகைகள்சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையின் உத்தரவுப்படி, தர்மபுரி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதை ஆய்வு செய்வதற்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கும் திட்டம் குறித்து வங்கி கிளைகளில் விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சூரியநாராயணன், உதவி பொதுமேலாளர் ரவீந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.