ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி திருவிழாதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தலமும், நம்மாழ்வார் அவதரித்த தலமுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் தோளுக்கினியானில் கொடிப்பட்டம் எடுத்து செல்லப்பட்டு, மாட வீதிகளில் உலா வந்து, மீண்டும் கோவில் சேர்ந்தது. காலை 8.45 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
8–ந் தேதி தேரோட்டம்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பொலிந்துநின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 5–ம் திருநாளான 4–ந் தேதி இரவில் கருடசேவை நடக்கிறது. 9–ம் திருநாளான 8–ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.
10–ம் திருநாளான 9–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.