தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரத்தில் 84 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள 84 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள 84 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைநெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் மாதம் 31–ந் தேதிக்குள் அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 145 கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 84 டாஸ்மாக் கடைகள் தற்போது நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அமைந்து உள்ளது.
இந்த டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இடமாற்றம் செய்யும் கடைகளை ஊருக்குள் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடைகளை இடமாற்றம் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
மூடப்படும்மேலும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள சுமார் 50 கடைகள் வரை இடமாற்றம் செய்வதற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. ஆகையால் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று (சனிக்கிழமை) முதல் 84 கடைகளும் மூடப்படும் என்று தெரிகிறது.