கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 27). கூலித்தொழிலாளி.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 27). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று காலை குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் முனுசாமி மட்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story