பேரம்பாக்கத்தில் கோவில் பிரம்மோற்சவ விழா
பேரம்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர்,
பேரம்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறும். வருகிற 6–ந் தேதி தேர்த்திருவிழாவும், 7–ந்தேதி திருக்கல்யாண திருவிழாவும் 8–ந் தேதி புஷ்பபல்லக்கும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story