கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை


கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
x
தினத்தந்தி 1 April 2017 3:00 AM IST (Updated: 1 April 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு  கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்க மாநிலத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். ஜான்விஜயகுமார், ராமு, பழனிஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கவுரவத்தலைவர் துரைபிருதிவிராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் கட்டுமான தொழிலாளர்கள் 843 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இதில் மாநில நிர்வாகிகள் அர்ச்சுனன்,  செல்வம், அய்யனாரப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story