பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2017 1:00 AM IST (Updated: 1 April 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து, காங்கிரசார் நேற்று நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து, காங்கிரசார் நேற்று நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ராம்நாத் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

ஒப்பாரி போராட்டம்

இந்த போராட்டத்தின் போது ஒருவர் எச்.ராஜா முகமூடி அணிந்து, நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்களும் எழுப்பினர்.

போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வாகை கணேசன், சொக்கலிங்க குமார், ராஜேஷ் முருகன், காவேரி, அந்தோணி செல்வராஜ், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story