தேசிய பாதுகாப்பு தின நிறைவு விழா
‘பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிட்’ நிறுவனம், 46–வது தேசிய பாதுகாப்பு தினத்தை கடந்த ஒரு மாதமாக கொண்டாடி வருகிறது.
சென்னை,
சென்னை பாடியில் உள்ள ‘பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிட்’ நிறுவனம், 46–வது தேசிய பாதுகாப்பு தினத்தை கடந்த ஒரு மாதமாக கொண்டாடி வருகிறது. அதன் நிறைவு விழா பாடியில் உள்ள நிறுவன வளாகத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் பி.போஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் இணை இயக்குனர் எஸ்.அம்பலவாணன், தொழிற்சாலையின் செயல் இயக்குனர்கள் எஸ்.கேசவன், பி.வி.மகாதேவன், முதுநிலை பொதுமேலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர்கள்
எம்.வி.கார்த்திகேயன் மற்றும் எஸ்.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு தினம் கடைபிடிக்கும்போது தொழிற்சாலையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் பி.போஸ் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
மேற்கண்ட தகவல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எஸ்.அம்பலவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story