திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வட்டார போக்குவரத்து
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளா சினிவாசன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் சேகர், துணைசெயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை அதிக அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து துறை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு டீசல் மீதான வாட் வரி உயர்த்தி உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 100–க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 350 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.