மணப்பறவை ஊராட்சியில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்


மணப்பறவை ஊராட்சியில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2017 1:14 AM IST (Updated: 1 April 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

மணப்பறவை ஊராட்சியில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

குடவாசல்,

குடவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தம்புசாமி ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய தலைவராக திருஞானசம்பந்தம், ஒன்றிய செயலாளராக சேகர், ஒன்றிய பொருளாளராக துரைமணி, துணை தலைவராக முத்தலிப், துணை செயலாளராக ராஜதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தடுப்பணை

அத்திக்கடை ஏ1 வாய்க்கால் தலைப்பில் இருந்து தூர்வார வேண்டும். சோழசூடாமணி ஆற்றில் ஓகை ஆற்றுபாலம் அருகில் தடுப்பணை அமைக்க வேண்டும். மணப்பறவை ஊராட்சியில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியினை அரசு உடன் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கெரக்கொரியா, மாவட்ட குழு உறுப்பினர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story