கள்ளிமேடு அடப்பாற்றில் தடுப்பணையை வேறு இடத்தில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்


கள்ளிமேடு அடப்பாற்றில் தடுப்பணையை வேறு இடத்தில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2017 1:19 AM IST (Updated: 1 April 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிமேடு அடப்பாற்றில் தடுப்பணையை வேறு இடத்தில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு அடப்பாற்றில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் கடல் நீர் உட்புகாமல் இருக்கவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்காகவும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகிறது.

இந்த தடுப்பணைகள் அனைத்தும் வேதாரண்யம் கால்வாய்க்கு மேற்கு பகுதியில் கட்டப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு சாதகமாக கட்டப்படுவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தடுப்பணை யை வேறுஇடத்தில் கட்டக்கோரி கடந்த 24-ந்தேதி தலைஞாயிறு கடைத்தெருவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் அடப்பாற்றில் தடுப்பணையை வேறு இடத்தில் கட்டக்கோரி கள்ளிமேடு அடப்பாறு பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீனாட்சுசுந்தரம், வேதரத்தினம், காமராஜ் மற்றும் தலைஞாயிறு, அவரிக்காடு, தாமரைப்புலம், கள்ளிமேடு, நாலுவேதபதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.

Next Story