மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2017 4:00 AM IST (Updated: 1 April 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மணல் அள்ள சட்டப்படி அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை மற்றும் தமிழகப் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் எடுத்து நூற்றுக்கணக்கான மாட்டுவண்டித் தொழிலாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்படுவதால் நீர்வளம் பாதிக்கப்படுவதாக கூறி போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மணல் அள்ளுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனை கண்டித்தும், ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ள சட்டபூர்வமாக அனுமதி வழங்க வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளுக்காக நேற்று காலை மாதா கோவில் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடும்பத்துடன் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் வெங்கடேசன், அர்ச்சுனன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிஷேகம், செயல் தலைவர் நாரா.கலைநாதன் உள்பட 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.


Next Story