புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுச்சேரி,
புதுவை சட்டசபை நேற்று முன்தினம் கூடியது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தபாஸ்கரன், சந்திரகாசு ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.1,481 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டையும் முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
நேற்று சட்டசபையில் 2016–17ம் ஆண்டிற்கான துணை கொடைகளுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் வாக்கெடுப்பும் நடந்தது. மேலும் 2017–ம் ஆண்டு நிதி ஒதுக்க சட்ட முன்வரைவு, புதுச்சேரி நகராட்சிகள் (திருத்தம்) சட்ட முன்வரைவு, புதுச்சேரி கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் (திருத்தம்) சட்ட முன்வரைவு ஆகியனவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தை காலவரையின்றி சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.
Next Story