காங்கிரஸ் அரசுடன் மோதல் முற்றுகிறது சட்டசபை நடவடிக்கைக்கு கவர்னர் கிரண்பெடி கடும் எதிர்ப்பு
புதுச்சேரி நகராட்சி ஆணையர் மாற்றப்பட்ட விவகாரத்தில் சட்டசபையின் நடவடிக்கைக்கு கவர்னர் கிரண்பெடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் அரசு-கவர்னர் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி
புதுவை கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்புரவு பணி, சமூக பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 18-ந்தேதி முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அழைத்து ஆலோசனை நடத்துமாறு புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரனுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆணையர் சந்திரசேகரன் கடந்த 22-ந்தேதி சுதானா நகரில் கூட்டம் நடத்தச் சென்றார்.
வாக்குவாதம்
அப்போது தொகுதி எம்.எல்.ஏ.வான பாஸ்கரை (அ.தி.மு.க.) கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்? என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாஸ்கர் எம்.எல்.ஏ.வும் அங்கு சென்றார். அப்போது பாஸ்கர் எம்.எல். ஏ.வுக்கும், நகராட்சி ஆணையருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கவர்ன ரிடம் ஆணையர் சந்திரசேகரன் புகார் அளித்தார். தனக்கு உரிய மரியாதை அளிக்காமல் நடந்துகொண்டதாக ஆணையர் சந்திரசேகரன் மீது சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் பாஸ்கர் எம்.எல்.ஏ. புகார் அளித்தார். இந்த புகார் உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையே பாஸ்கர் எம்.எல்.ஏ. மீது ஆணையர் சந்திரசேகரன் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் தெரிவித்தார். அதில் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
சபாநாயகர் உத்தரவு
இந்த பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரின் ஆதரவு இருப்பதால் நகராட்சி ஆணையர் வரம்புமீறி செயல்படுவதாகவும், தனது உயர் அதிகாரிகளுக்கே தெரிவிக்காமல் முடிவுகளை எடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள். அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் தடையாக இருப்பதாகவும் அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் கேட்டுக்கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் பேசி முடித்ததும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதாவது நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை மாற்றி உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும். அவருக்கு பதிலாக வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டும். போலீசில் ஆணையர் கொடுத்த புகாரை ஏற்கக்கூடாது. சம்பந்தப்பட்ட ஆணையர் உரிமைக்குழுவுக்கு வந்து தனது தரப்பு நியாயத்தை விளக்கலாம் என்று அவர் உத்தரவிட்டார்.
கவர்னருக்கே அதிகாரம்
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையராக இருந்த சந்திரசேகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய நகராட்சி ஆணையராக கலை பண்பாட்டுத்துறை இயக்குனரான கணேசன் நியமிக்கப்பட்டார்.
இதுபற்றிய விவரம் தற்போது டெல்லியில் இருக்கும் கவர்னர் கிரண்பெடிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கிருந்தபடி ஒரு கடிதத்தை தனது செயலாளர் தேவநீதிதாஸ் மூலம் தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவிடம் ஒப்படைக்கச் செய்தார்.
அதில், புதுவை குடிமைப்பணி அதிகாரியான புதுச்சேரி நகராட்சி ஆணையரை கவர்னரின் அனுமதியின்றி மாற்றக்கூடாது, இதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் மிக்கவர் கவர்னர்தான் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 3-ந்தேதி கவர்னர் மாளிகைக்கு வந்து ஆலோசனை நடத்துமாறு கவர்னர் தெரிவித்ததாக தலைமைச் செயலாளரிடம் தேவநீதிதாஸ் கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகளிடையே அச்சம்
இந்தநிலையில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதற்கான உத்தரவினை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா பிறப்பித்தார். இது கவர்னர் மாளிகை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாற்றம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளங்களில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் தனக்குத்தான் அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது சட்டசபை உரிமைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்மீது விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தரப்பு நியாயத்தை விளக்க அவகாசம் வழங்கப்படவில்லை. அதோடு இரவு 11 மணிக்கு அவர் வீட்டின் சுவரில் இந்த உத்தரவை அவசரமாக ஒட்டியுள்ளனர். இது அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படக் கூடும்’ என்று தெரிவித்துள்ளார்.
அரசுடன் மோதல் முற்றுகிறது
ஏற்கனவே கவர்னரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கவர்னர் மீது அமைச்சர்களும் வெளிப்படையாக குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில் தற்போது கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்ட நகராட்சி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்ட விவகாரம் அரசுடனான மோதலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
சட்டசபையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்து இருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையின் மூலம் புதுவையில் கவர்னருக்கு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரமா? என்ற அதிகாரப்போட்டி பகிரங்கமாக வெடித்துள்ளது.

Next Story