3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை புனே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புனே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
புனே,
3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புனே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
3 பேர் கொலைபுனே, சதாசிவ்பேட் விஷ்ராம்பாக்வாடா சாலையோரத்தில் கடந்த 2012–ம் ஆண்டு கைலாஷ் சவான், சாகர் லஹரே, சச்சின் குடலே ஆகிய 3 பேர் மர்மநபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுபற்றி கோரேகான்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவர்களை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த தத்தாரய் தாம்படே(வயது55), அவரது மகன்கள் சாகர்(24), கண்ஸாம்(22), நண்பர் விநாயக் சவான்(30) ஆகிய 4 பேரும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்திருந்தது தெரியவந்தது.
ஆயுள் தண்டனைஇதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, புனே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக 10 பேர் சாட்சியம் அளித்தனர். இதன் மூலம் 4 பேர் மீதான கொலைக்குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.