வாகனங்களுக்கு குறைந்த அளவு பெட்ரோல் போட்டு மோசடி பெட்ரோல் பங்குகளுக்கு நோட்டீசு
வாகனங்களுக்கு குறைந்த அளவு பெட்ரோல் போட்டு மோசடியில் ஈடுபட்டு வந்த பெட்ரோல் பங்குகளுக்கு சட்ட அளவியில் துறையினர் நோட்டீசு வழங்கியுள்ளனர்.
மும்பை,
வாகனங்களுக்கு குறைந்த அளவு பெட்ரோல் போட்டு மோசடியில் ஈடுபட்டு வந்த பெட்ரோல் பங்குகளுக்கு சட்ட அளவியில் துறையினர் நோட்டீசு வழங்கியுள்ளனர்.
பெட்ரோல் போடும்போது மோசடிபெட்ரோல் பங்குகளில் எரிபொருட்களை நிரப்பும் போது முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர். அதாவது வாகனத்திற்கு 5 லிட்டர் பெட்ரோல் போட்டால் அதைவிட குறைவான அளவு(சுமார் 4.8 லிட்டர்) மட்டுமே நிரப்பப்படும். ஆனால் பெட்ரோல் போடும் அலகில் 5 லிட்டர் என காட்டும். பெட்ரோல் போடும் அலகில் முறைகேடு செய்து இந்த மோசடி நடந்து வருகிறது.
இந்தநிலையில் பொதுமக்களின் புகாரை அடுத்து சட்ட அளவியில் துறையினர் மாநிலம் முழுவம் உள்ள பெட்ரோல் பங்குகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நோட்டீசுமும்பையில் மட்டும் 145 பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பெட்ரோல் பங்குகளில் இருந்த 1,734 பெட்ரோல் நிரப்பும் அலகுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 41 அலகுகள் குறைந்த அளவு மட்டுமே பெட்ரோலை நிரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அலகுகளுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குகளுக்கு நோட்டீசு வழங்கினர்.
மோசடி நடந்த பெட்ரோல் பங்குகள் சார்க்கோப், அந்தேரி, பாந்திரா, வில்லேபார்லே, பாண்டுப், செம்பூர் மற்றும் தென்மும்பை பகுதிகளில் அமைந்துள்ளன. மும்பை தவிர புனே, கொங்கன் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த பெட்ரோல் பங்குகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.