ஹிட்லரை புகழ்ந்து எழுதிய அமெரிக்க ஜனாதிபதி! கென்னடி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜான் கென்னடி, ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரை புகழ்ந்து எழுதிய தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிட்லர்
ஜான் கென்னடி தனது 28-வது வயதில் ‘ஹெர்ஸ்ட்’ என்ற பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, யுத்தம் குறித்த செய்திகளைச் சேகரிக்க ஜெர்மனிக்குச் சென்றார்.
ஜெர்மனியின் பல பகுதிகளை பார்வையிட்டு செய்திகள் சேகரித்து நாடு திரும்பிய கென்னடி, தமது பயணம் குறித்த விரிவான பதிவு ஒன்றை அப்போது எழுதியுள்ளார்.
அதில், அவமரியாதைகள், வெறுப்புகளை எதிர்கொண்டு சில ஆண்டுகளில் ஒருவர் எப்படி புகழின் உச்சிக்குச் சென்றுள்ளார் என்பதை நம்மால் மிக எளிதில் புரிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லருக்குத் தனது நாட்டின் மீது எல்லையற்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் அமைந்தது. ஹிட்லர் வாழ்ந்த முறையால் அவரது வாழ்க்கை ஒரு மர்மமாகவே இருந்தது. அவரது இறப்பும் அந்த மர்மத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்யும் என்று குறிப்பிட்ட பதிவில் கென்னடி கூறியுள்ளார்.
1945-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் குறிப்பு தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதனால்தான் கென்னடியின் அந்தக் குறிப்பு தற்போது பலரின் பார்வைக்கு வந்துள்ளது.
கென்னடியின் அக் குறிப்பேட்டை கடந்த 70 ஆண்டுகளாகப் பாதுகாத்துவந்த டீர்ட்ரே ஹெண்டர்சன் என்ற பெண்மணி கூறுகையில், கென்னடி ஒருபோதும் ஹிட்லரின் இன வாதத்தையோ அல்லது அவரால் நிகழ்த்தப்பட்ட கொடுஞ்செயல்களையோ நியாயப்படுத்தவில்லை, ஹிட்லரை சூழ்ந்திருந்த மர்மங்களை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார் என் கிறார்.
அந்தக் குறிப்பேட்டில் ஓர் இடத்தில்கூட நாஜிக்கள் மீது கென்னடி அனுதாபத்தையோ பரிதாபத்தையோ வெளிப்படுத்தவில்லை எனவும் அப்பெண்மணி விளக்கமளித்துள்ளார்.

Next Story