‘வாசனை’யை இழந்தால் தொடரும் அபாயம்


‘வாசனை’யை இழந்தால் தொடரும் அபாயம்
x
தினத்தந்தி 1 April 2017 10:30 PM IST (Updated: 1 April 2017 3:32 PM IST)
t-max-icont-min-icon

வயதானவர்கள் தங்களின் வாசனை உணர்வை முழுமையாக இழக்க நேர்ந்தால் அவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

முதியவர்களின் வாசனை உணர்வை கணக்கிட்டு, அதன் மூலமே அவர்களின் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்த முடியும் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆயிரத்து 800 பேருக்கும் அதிகமான மக்களிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், வாசனையை உணர்ந்துகொள்ளத் தடுமாறும் மக்களிடம் அடுத்த 10 ஆண்டுகளில் மரணத்துக்கான அறிகுறிகள் தென்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்தப் புதிய ஆய்வுக்கும், ‘டிமென்சியா’ என்ற ஞாபக சக்திக் குறைவு நோயாளி களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான ஓனஸ் ஒலாப்சன் கூறியுள்ளார். ‘டிமென்சியா’ நோயால் பாதிக்கப்பட்டாலும் வாசனை உணர்வு இருக்காது என்று முன்பு ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்று, குறிப்பிட்ட புதிய ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது. ஆயிரத்து 174 இளைஞர்கள் மற்றும் 40 முதல் 90 வயது உடையவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவில், வாசனை உணர்வை அறவே இழந்துள்ள பலர் அடுத்த 10 ஆண்டுகளில் மரணத்தை நெருங்குவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துவது உறுதிசெய்யப்பட்டி ருக்கிறது.

Next Story