மதுபான முதலாளி...!
மது அருந்த சென்ற இடத்தில் நல்ல மதுபானம் கிடைக்காததால், மதுபான அதிபராகியுள்ளார் ஹாலிவுட் நடிகர் ஷானிங் டாட்டம்.
மது அருந்த சென்ற இடத்தில் நல்ல மதுபானம் கிடைக்காததால், மதுபான அதிபராகியுள்ளார் ஹாலிவுட் நடிகர் ஷானிங் டாட்டம். ஜி.ஐ.ஜோ திரைப்படத்தின் கதாநாயகனான டாட்டம், ‘வோட்கா’ எனப்படும் மதுபானத்தை விரும்பி சாப்பிடக்கூடியவர். அன்றும் அப்படி தான் நண்பர் ஜாக்குடன் வோட்காவை சுவைத்தபடியே நிறை, குறைகளை பேசியிருக்கிறார்.
‘வோட்கா எப்பொழுதுமே ஏன் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலேயே ஏன் தயாரிக்கப்படுவது இல்லை’ என்று அவர்கள் பேசியுள்ளனர். மேலும் ‘அமெரிக்கர்களுக்கு ஏற்ற சுவையில் வோட்காவை அமெரிக்காவிலேயே தயாரிக்கலாமே!’ என்ற யோசனையை ஜாக் கொடுக்க, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார், ஷானிங் டாட்டம். உடனே களத்தில் இறங்கிய டாட்டம், ‘பார்ன் அண்ட் பிரெட்’ (Born and Bred) என்ற வோட்கா நிறுவனத்தை தொடங்கிவிட்டார்.
‘பல வோட்கா நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்ட பிறகே, இந்த நிறுவனத்தை தொடங்கினோம். இதில் அமெரிக்கன் பிளேவர் என்ற வகை அதிகமாக விற்பனையாகிறது. இதைத் தவிர, அமெரிக்காவின் பிற மாகாணங்களின் பெயரிலும் பிளேவர்களையும் தயாரித்து வருகிறோம். முழுக்க முழுக்க அமெரிக்கர்களை நம்பியே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த பானத்தை ஹாலிவுட் பிரபலங்களும், பாட்டில் பாட்டிலாக வாங்கிச் செல்கின்றனர். வெகு விரைவில் மருத்துவ குணம் நிரம்பிய வோட்காவையும் தயாரிக்க இருக்கிறோம்’ என்கிறார் அதிரடி நாயகன், டாட்டம்.
ஏற்கனவே பல ஹாலிவுட் பிரபலங்கள் மதுபான தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், டாட்டமும் இந்தத் தொழிலில் குதித்திருப்பது, தொழில் போட்டியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story