1. ஜோதிராவ் புலே: ‘இந்திய சமூகப்புரட்சியின் தந்தை’
காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சியால் வரலாற்றின் நினைவலைகளில் இருந்து மறைந்து போன ரகசியங்களை இத்தொடரில் தந்து வருகிறோம்.
காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சியால் வரலாற்றின் நினைவலைகளில் இருந்து மறைந்து போன ரகசியங்களை இத்தொடரில் தந்து வருகிறோம். தியாகத்தின் திருவுருவமாக திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பற்றி அதிகம் அறிந்திராத தகவல்களை கடந்த வாரங்களில் பார்த்தோம். இனி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூகப்புரட்சி என்ற விதையைத் தூவிய மகாத்மா குறித்து பார்ப்போம்.
உயர் வகுப்பைச் சேர்ந்தவரின் திருமணம் அது. மாப்பிள்ளையின் அழைப்பின் பேரில் அவனது நண்பன் ஒருவன் திருமணத்திற்காக வருகிறான். திருமண ஊர்வலத்தில் அந்த குறிப்பிட்ட உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு மணமகனின் நண்பனும் சேர்ந்துக்கொண்டான். ஊர்வலம் கொஞ்ச தூரம் சென்றவுடன் திடீரென ஒருவர் அந்த இளைஞனைப் பார்த்து கன்னாபின்னாவென கத்தினார்.
‘ஏய் சூத்திரனே... உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் எங்களோடு சமமாக நடந்து வருவாய்? சாதி மரபுகள் அனைத்தையும் நீ மீறி விட்டாய்.. நீ எங்களுக்கு சமமானவன் அல்ல... எங்களை அவமதிக்கும் இந்த செயலை செய்வதற்கு முன் நீ ஆயிரம் முறை யோசித்து இருக்க வேண்டும். ஒன்று எங்களுக்கு பின்னால் கடைசியாக வா, இல்லை; இந்த இடத்தைவிட்டு ஓடி விடு. இப்போது எல்லாம் மக்களுக்கு வெட்கம் இல்லாமல் போய் விட்டது, சாதி மரபுகளை இஷ்டத்திற்கு மீறுகிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியில் இவர்களுக்கு அகம்பாவம் ஏற்பட்டுவிட்டது’ என்று அந்த நபர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.
‘நண்பன் அழைத்தானே’ என்று அவனது திருமணத்திற்கு வந்த ஜோதிராவ் எனும் இளைஞன் இந்த வார்த்தைகளால் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான். அழுகையும், ஆத்திரமும் தொண்டைக்குழியை அடைக்க, அவமானத்தால் அவனது உடல் கூனிக்குறுகியது. வேதனையும், வேகமும் உந்தித்தள்ள ஊர்வலத்தில் இருந்து விலகி, விறுவிறுவென வீடு வந்து சேர்ந்தான்.
அதற்குமேல் அவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. தந்தையின் முன்னால் உடைந்து அழுதபடியே நடந்ததை விவரித்தான். இதைப்போன்ற எத்தனையோ அவலங்களை ஏற்கனவே சந்தித்திருந்த இளைஞனின் தந்தை, ‘அவர்கள் சொன்னது சரி தானப்பா.. நாமும் அவர்களும் எப்படி ஒன்றாக முடியும்? நீ செய்த தவறுக்குத் தண்டனை கொடுக்காமல் உன்னைத் துரத்திவிட்டது உயர் வகுப்பினரின் கருணையைக் காட்டுகிறது. இப்போதாவது பரவாயில்லை. எங்கள் காலங்களில் இத்தகைய தவறுகள் செய்பவர்களுக்கு யானையின் காலால் மிதிபட்டு சாகும் தண்டனைதான் கிடைக்கும்’ தந்தையின் வார்த்தைகள் இளைஞனின் காதுகளில் நெருப்புத் தூண்டங்களாக வந்து விழுந்தன.
‘நீதிக்கோட்பாடுகள்’ என்ற பெயரில் சாதி வெறி தாண்டவமாடிய சம்பவங்கள் சிலவற்றையும் தந்தை சொல்ல, சொல்ல அந்த இளைஞனின்அத்தனை அங்கங்களிலும் கோபம் கொப்பளித்தது. அன்றைக்கு இரவு முழுக்க அவனது கண்களுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நேரிட்ட அவமானமும் நிலைகொண்ட கோபமும் வயிற்றுக்கும் நெஞ்சுகுழிக்கும் வேகம் குறையாமல் உருண்டு கொண்டிருந்தன.
உலகத்தின் ஆகப்பெரிய சாதனைகளுக்கெல்லாம் அவமானங்களே ஆணிவேராக இருந்திருக்கின்றன. அகிலத்தையே புரட்டிப்போட்ட அத்தனை புரட்சிகளையும் தோண்டி எடுத்து பார்த்தால் அவற்றின் அடி நாதமாக அவமானம் இருப்பதை காணமுடியும். ஆம்... அவமானத்தின் வலிகளால் நிரம்பி வழிந்த அந்தக் கணங்களில்தான் இந்திய தேசத்தினுடைய சமூகப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா ஜோதிராவ் புலே உருவானார்.
‘சத்ரிய மாலி’ என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக கொண்டது ஜோதிராவின் குடும்பம். மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் புரந்தர் என்ற ஊருக்கு அருகிலுள்ள கான்வாடி என்பதே அவரது கிராமம். பூக்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை இவர்கள் விளைவித்தார்கள். இவர்கள் புனே நகருக்கு குடிபெயர்ந்து பூ வியாபாரிகளாக அறியப்பட்டதால் ‘புலே’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது.
கோவிந்தராவ் புலேவுக்கும் சிம்னா பாய்க்கும் மூன்றாவது மகனாக 1827–ம் ஆண்டு ஏப்ரல் 11–ந் தேதி ஜோதி பிறந்தார். ஒரு வயதிலேயே தாயைப் பறிகொடுத்த அவர் செவிலித்தாயின் அரவணைப்பிலேதான் வளர்ந்தார். அப்போதெல்லாம் கல்வி என்பது இன்றைக்கு நாம் நினைக்கிற பொருளில் இல்லை. உயர்ந்த சாதியினர் மட்டுமே தனிப்பட்ட முறையில் கல்வி கற்றனர். கற்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை இருந்தது.
சமூகத்தின் தட்டுகளில் அவர்களுக்கு கீழிருந்தவர்கள் எங்கோ ஒருவர் படித்தாலே அது பெரிய சங்கதி. மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறித்துவ மிஷினரிகள் கல்வி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். அவை மெல்ல கவனம் பெறத்தொடங்கி இருந்தன. சிறு வயதிலே துறுதுறுப்பாக இருந்த ஜோதியைப் படிக்க வைக்க அவரது தந்தை ஆசைப்பட்டார். அதுவரையில் அவரது தலைமுறையில் யாரும் படித்ததில்லை. ஏழாவது வயதில் ஜோதியை ஆரம்பக் கல்வி கற்க அனுப்பினார். தாய் மொழியான மராத்தியில் எழுதப்படிக்கவும், மனக்கணக்குகளைப் போடவும் கற்றுக்கொண்டார்.
ஜோதி படித்தது பலரது கண்களையும் உறுத்தியது. அவனது தந்தை கோவிந்தராவின் கடையில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்த உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அதிகம் எரிச்சலடைந்தார். ‘படித்து விட்டால் ஜோதி தவறான வழிகளில் போய்விடுவான்’ என்று தந்தையின் மனதைக் கெடுத்தார்.
இதனால் அடிப்படை கல்வியோடு ஜோதியின் படிப்பும் கெட்டது. அக்கால வழக்கப்படி 13 வயதானபோது 8 வயதான சாவித்திரி என்பவரை ஜோதிராவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனாலும் படிப்பு மீதான ஆசை ஜோதிக்கு இருந்து கொண்டே இருந்தது. பகலில் தோட்டத்தில் கடினமாக வேலை செய்துவிட்டு, இரவில் வீட்டுக்கு வந்து விளக்கு வெளிச்சத்தில் எதையாவது படித்துக்கொண்டிருப்பார்.
இதனை கவனித்த உருது ஆசிரியர் ஒருவரும், கிறித்துவ போதகர் ஒருவரும் ஜோதியின் தந்தையிடம் பேசி கல்வி மீதான அவனது ஆர்வத்தைப் புரிய வைத்தார்கள். மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மகனை மீண்டும் படிக்க அனுப்பினார் கோவிந்தராவ். புனே ஸ்காட்டிஷ் மிஷினரி பள்ளியில் சேர்ந்தார். பின்னர் புத்வர் அரசுப்பள்ளியில் படித்தார். உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர் அவருக்கு நண்பர்களாக கிடைத்தனர். பாடப்புத்தகங்களைத் தாண்டியும் படித்தார்.
தாமஸ் பெயின் எழுதிய ‘மனிதனின் உரிமைகள்’ என்ற புத்தகம் அவருக்குள் புதிய சிந்தனைகளை விதைத்தது. வீர சிவாஜி, ஜார்ஜ் வாஷிங்டன், மார்டின் லூதர் கிங் போன்றவர்களின் வரலாறுகள் ஜோதிராவை மெய்சிலிர்க்க வைத்தன. 1847 வரை ஆங்கிலப்பள்ளியில் கற்று அதோடு படிப்பை முடித்துக் கொண்டார்.
புனேவில் கல்லூரிகள் அப்போது இல்லை. தன் குடும்பத்தொழிலான பூ வியாபாரத்தை பார்ப்பவராகவோ அல்லது ஏதேனும் அரசாங்க வேலைக்குச் செல்பவராகவோ வந்திருக்க வேண்டிய ஜோதிராவின் வாழ்வை அந்த உயர்வகுப்பு நண்பனின் திருமண ஊர்வலம் புரட்டிப்போட்டது. அதிலே தமக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பிறகு தீர்க்கமாக சிந்தித்தார். புரையோடிக் கிடந்த சாதி முறைகளை முறியடிக்க கல்வியால் மட்டுமே முடியும் என்ற உறுதியாக நினைத்தார்.
ஜோதிராவுக்கு முன்பே சாதிய வழக்குகளுக்கு எதிரான குரல்கள் எழுந்திருந்தாலும் அவை வெறும் ஏட்டளவிலேயே இருந்தன. இவர் மட்டுமே அதனை உடைப்பதற்கான செயல்பாடுகளைத் தொடங்கினார். அவர் செய்த வேலை அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் தலையில் அதிரடியாக இறங்கியது. அப்படி என்ன செய்தார்? அதற்காக ஜோதிராவுக்கும் அவரது மனைவிக்கும் கிடைத்த உறைய வைக்கும் பரிசுகள் என்ன? அடுத்த வாரம் காண்போம்.
(ரகசியங்கள் தொடரும்)
கடினமான காலம் அது!
விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, ஜோதிராவ் புலே நினைவாக தொழில்நுட்ப கல்விக்கூடத்தைத் திறந்து வைத்து பேசும் சொன்ன வார்த்தைகள் ஜோதிராவ் காலத்தில் இருந்த சூழலைப் படம் பிடித்து காட்டுகிறது. ‘பெண் கல்விக்காகவும் தீண்டாமை ஒழிப்பிற்காகவும் மகாத்மா புலே போராடி வந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக எந்தவொரு தரப்பிலும் உதவி வருவதற்கான சாத்தியமே இல்லாமல் இருந்தது’ என்று நேரு கூறினார்.
மாற்றத்திற்காக எழுதிக்குவித்தவர்!
ஜோதிராவ் சமூகப் புரட்சியாளர் மட்டுமல்ல; ஏராளமாக எழுதி குவித்திருக்கும் எழுத்தாளர்; கவிஞர். சாதி ஒழிப்பு, கல்வி, தாழ்த்தப்பட்டோருக்கான ஆலோசனைகள் போன்றவை குறித்த நூல்கள், துண்டு பிரசுரங்கள், கையேடுகளை ஏராளமாக வெளியிட்டார். பாடல்கள் மூலம் எளிய மக்களிடம் சீர்த்திருத்த கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பி நிறைய பாடல்களை எழுதினார். பிற்கால இந்திய வரலாற்றில் புரட்சியாளர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் பெரும் ஊக்கச் சக்தியாக திகழ்ந்த வீர சிவாஜியின் புகழை ஆங்கிலேய ஆட்சியில் பாடிய முதல் கவிஞர் ஜோதிராவ் தான்.

Next Story