மாரண்டஅள்ளியில் தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு நடிகர் லாரன்ஸ் நேரில் ஆறுதல்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மேல் சந்திராபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மேல் சந்திராபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, விவசாயி. வறட்சியின் காரணமாக தோட்டத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த பெரியசாமி தற்கொலை செய்துகொண்டார். இவருடைய குடும்பத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 2 பசுமாடுகளையும், ரூ.25 ஆயிரமும் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். தற்போது அந்த குடும்பம் எவ்வாறு உள்ளது, மாடுகள் பராமரிக்கப்படுகின்றனவா? என்பதை அவர் நேரில் வந்து பார்த்தார். மேலும் தற்கொலை செய்த பெரியசாமியின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். அப்போது லாரன்ஸ் கூறுகையில், விவசாயிகள் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தனி ஒருவரால் அனைத்து உதவிகளையும் செய்துவிட முடியாது. இதற்கு அரசாங்கம் முழு கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயம் அழிந்து நாமும் உணவு பஞ்சத்தால் அழிய நேரிடும் என தெரிவித்தார்.