ஓமலூர், சங்ககிரியில் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் 82 பேர் கைது
ஓமலூர், சங்ககிரியில் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், சேலம்–தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூரில் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தியும், அந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஜெயமோகன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் பாலு, தொகுதி பொறுப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட பொறுப்பாளர் யுவராஜ், ஆட்டோ தொழிற்சங்க மாநில துணை தலைவர் சரவணன், ஓமலூர் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர் அணி செயலாளர் கவியரசு, மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சண்முகம், தமிழர் படை தலைவர் விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சங்ககிரிசங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அந்த சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மாவட்டஇளைஞர்அணிசெயலாளர் மெய்யப்பன், முருகேசன் உள்பட 15 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்தனர். பிறகு மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.