தி.மு.க. பிரமுகர், நண்பரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்களுக்கு வலைவீச்சு
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45)
மதுரை,
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), தி.மு.க. பிரமுகர். இவர் தனது வீட்டின் முன்பு அமர்ந்து, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர்.
அவர்கள் திடீரென்று ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் கத்தியால் இருவரையும் வெட்டி விட்டு செல்போன்களை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story