புதிய ஊதியம் வழங்ககோரி அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


புதிய ஊதியம் வழங்ககோரி அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 1 April 2017 11:44 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் பணிக்கு வந்த டாக்டர்கள் புதிய ஊதியம் வழங்க வேண்டும்

கடலூர்,

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் பணிக்கு வந்த டாக்டர்கள் புதிய ஊதியம் வழங்க வேண்டும், மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையான பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணிபுரிந்ததை காண முடிந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் டாக்டர் கேசவன் கூறுகையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பில் 6–வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி டாக்டர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களின் மருத்துவ சேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இன்று (நேற்று) முதல் வருகிற 5–ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிகிறோம். இதன்பின்னர் மாநில சங்கத்தின் அறிவுரைபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் அரசு தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த சுமார் 400–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.


Next Story