ஆண்டிப்பட்டி அருகே நூற்பாலை குடோனில் தீ
ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை குடோனில் தீ
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை செயல்படுகிறது. அதே பகுதியில், நூற்பாலையின் கழிவு பஞ்சுகளை தேக்கி வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் பஞ்சில் பற்றி எரிந்த தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் நூற்பாலை ஊழியர்கள் குடோனில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 10 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story