சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ஆய்வு


சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2017 3:45 AM IST (Updated: 2 April 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

பொள்ளாச்சி,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வக்கீல் சரவண பெருமாள் என்பவரை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலனூர், ஜோத்தம்பட்டியில் குளம், குட்டைகள் மற்றும் சாலையோரங்களில் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சரவண பெருமாள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதே போல அவர் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தினார்.


Next Story