நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி வயலில் மயங்கி விழுந்து சாவு
புதுக்கோட்டை அருகே நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள செய்யானம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவருக்கு செய்யானம் பகுதியில் சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். கண்ணனுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.
இந்த ஆண்டாவது விவசாயம் செழித்து லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தனது வயலில் நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், வறட்சியின் காரணமாகவும் நெற்பயிர்கள் கருகின.
மயங்கி விழுந்து சாவு
விவசாயம் கை கொடுக்காததால் தனது வயலை விற்று மகள் திருமணத்தை நடத்தி விடலாம் என கண்ணன் முடிவு செய்தார். ஆனால், அவரது வயல் மேடான பகுதியில் உள்ளது என்று கூறி யாரும் வாங்க முன் வரவில்லை. இதனால் கண்ணன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை கண்ணன் தனது வயலுக்கு சென்றார். அங்கு நெற்பயிர்கள் கருகி கிடப்பதை கண்டு மிகவும் வேதனைப்பட்ட அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து, கண்ணன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவரது உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கண்ணன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் செய்யானம் கிராம நிர்வாக அலுவலர் சந்தானம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கண்ணன் இறந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story