ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
திருச்சி நவல்பட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
திருவெறும்பூர்,
திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள வீரசிங்க மகாநாட்டின் முக்கிய கிராமமான நவல்பட்டில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்று அதற்கான பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமின்றி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் அழைத்து வரப்பட்டு பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் கணேஷ் குமார், திருவெறும்பூர் தாசில்தார் ரங்கராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து, தகுதியான காளைகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதித்தனர். இதேபோல் மாடுபிடி வீரர் களும் பரிசோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் மட்டும் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். முதலில் நவல்பட்டு ராப்சல் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வீரசிங்க மகா நாட்டில் அமைந்துள்ள கிராமங்களின் கோவில் காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். இதனை தொடர்ந்து வெளி மாவட்டங்களில் பிரபலமான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
20 பேர் காயம்
இந்த காளைகளை அடக்குவதற்கு 150 பேர் வீதம் 3 பிரிவுகளாக 450 பேர் நேற்று காலையில் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு பிரிவாக காளைகளை அடக்கினர். நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை விட மிக சிறப்பாக ஜல்லிக்கட்டு காளைகள் பாய்ந்து தங்களை அடக்க வந்த வீரர்களை அடக்க விடாமல் பரிசுகளை தங்களது உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.
இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 20 வீரர்கள் காயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் நவல்பட்டு கிராமத்தின் சார்பில் பீரோ, கட்டில், மின் விசிறி, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வம் தலைமையில் 165 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story