களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்


களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

களக்காடு,


களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெருமாள், தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டன. கொடி மரத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

 விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10–ம் திருநாளான வருகிற 10–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் மற்றும் விழா மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story