சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி திருவள்ளூர் மாவட்டத்தில் 177 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி திருவள்ளூர் மாவட்டத்தில் 177 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன காஞ்சீபுரம் மாவட்டத்தில் 183 கடைகள் அகற்றம்
திருவள்ளூர்,
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு மேற்கண்ட இடங்களில் உள்ள கடைகளை அகற்றாமல் காலதாமதம் செய்து வந்தது. மார்ச் மாதம் 31–ந்தேதிக்குள் மேற்கண்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 315 டாஸ்மாக் கடைகளில் 177 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக 183 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.
Next Story