விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஒட்டிகள் கோரிக்கை


விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஒட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் ஏரியில்விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் ஏரியில் கடந்த 24–ந் தேதி முதல் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இருந்து தினந்தோறும் 100–க்கும் மேற்பட்ட லாரிகளில் திருவள்ளூர், பூந்தமல்லி, பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு, திருத்தணி போன்ற பகுதிகளுக்கு சவுடு மண் எடுத்து செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான சவுடு மண் எடுத்துகொண்டு அதன்மேல் தார்ப்பாய் போடாமல் வேகமாக செல்கிறது. இதனால் அந்த லாரிகளுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே அரசு விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுத்து செல்லும் லாரிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story