தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு
சென்னை தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு
தாம்பரம்,
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் துலக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர், தாம்பரம் கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் அதை சீரமைக்க அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி சேகர் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சேகர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story