சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து வாலிபர் பலி
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தர்காவின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து வாலிபர் பலி
ராயபுரம்,
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தர்காவின் பின்புறம் பள்ளம் தோண்டும் பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புலிசன் கிஸ்கா (வயது 22), சுராஜ் (22) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளம் தோண்டி பக்கவாட்டில் போடப்பட்டிருந்த மண் திடீரென சரிந்து பள்ளத்தில் இருந்த 2 பேர் மீதும் விழுந்தது.
இதனால் அவர்கள் 2 பேரும் மண்ணில் புதைந்தனர். உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாக போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். ஆனால் புலிசன் கிஸ்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சுராஜ் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story