பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை; நைஜீரியா வாலிபர் கைது


பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை; நைஜீரியா வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 5:08 AM IST (Updated: 2 April 2017 5:08 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தார்கள். விசாரணையில், பிடிபட்டவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த பிரைட் இகாலோ (வயது 36) என்பதும், பெங்களூரு சுல்தான் பாளையா அருகே புவனேஷ்வரி நகரில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போதைப்பொருளை விற்பனை செய்ய ஆர்.டி.நகர் பகுதியில் காத்து நின்றதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள்.

கைதான பிரைட் இகாலோவிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் கொகைன் போதைப்பொருள், ரூ.12,500, ஒரு விலை உயர்ந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story