தினம் ஒரு தகவல் : ஷாஜஹானாபாத்
1639–ம் ஆண்டுக்கு முன்பு வரை மொகலாயர்கள் ஆண்ட இந்தியாவிற்கு தலைநகராக ஆக்ரா இருந்தது.
1639–ம் ஆண்டுக்கு முன்பு வரை மொகலாயர்கள் ஆண்ட இந்தியாவிற்கு தலைநகராக ஆக்ரா இருந்தது. அப்போது மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தார்.
முந்தைய மொகலாய மன்னர்கள் யாருக்கும் இல்லாத அளவு கற்பனை சக்தி படைத்த ஷாஜஹானுக்கு, ஆக்ரா நகரம் பிடிக்கவில்லை. காரணம் அங்கு பெரிய அளவில் ஊர்வலம் செல்ல அகலமான வீதிகள் இல்லை என்பது ஷாஜஹான் அலுப்புடன் சொல்லும் வாக்கியம். ஆக்ரா கோட்டை யும், அரண்மனையும் மன்னருக்கு சிறியவையாக தெரிந்தன. இந்தியாவின் தலைநகராக இயங்க தகுதியான இடம் டெல்லி தான் என்று அவர் கருதினார்.
டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஒரு புத்தம் புது நகரை உருவாக்குங்கள் என்று ஆணையிட்டார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில், ஒன்பது ஆண்டுகளில் கம்பீரமாக உயிர் பெற்று எழுந்தது ‘ஷாஜஹானாபாத்’. இன்றைக்கு இதன் பெயர் பழைய டெல்லி.
ஷாஜஹான் புதிய தலைநகரம் அமைக்க தேர்தெடுத்த இடம் பிரமாண்டமான காட்டுப்பகுதி. 1639 ஏப்ரல் 29–ந்தேதி பிரமாண்ட நகருக்கான பூமிபூஜை போடப்பட்டது. உஸ்தாத்ஹீரா, உஸ்தாத்ஹமீத் என்று இரண்டு கட்டிடத் தொழிலாளர்கள் முதலில் மண்வெட்டியை உயர்த்தி நிலத்தை வெட்டினார்கள். இவர்கள் தங்கியிருந்த குடிசை இருந்த பகுதி பின்னாளில் பெரிய தெருக்களாக உருவாக்கப்பட்டன. அந்த தெருக்களுக்கு இந்த தொழிலாளர்களின் பெயரே வைக்கப்பட்டது. இன்றைக்கும் பழைய டெல்லியில் அந்த தெருக்களின் பெயர்கள் மாறாமல் இருப்பதை காணமுடியும்.
வேலை தொடங்கிய இரண்டு வாரத்தில் புதிய அரண்மனைக்கான அடிக்கல்லை நாட்டினார் ஷாஜஹான். அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளின் தலைகள் சீவப்பட்டு உடல்கள் பள்ளத்தில் வீசப்பட்டன. பலியிடப்பட்ட மனித உடல்கள் மீது மளமளவென்று கட்டிடம் எழுந்தது. 124 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை உயர்ந்தது.
நகரின் பிரமாண்டமான கடைவீதியாக ‘சாந்தினி சவுக்’ ஷாஜஹானின் மகள் ஜஹனாராவின் நேரடி பார்வையில் உருவானது. அன்றைக்கே அந்த தெருவில் 1,560 கடைகள் இருந்தன.
1648 ஏப்ரல் 19–ம் தேதி ஷாஜஹான் யமுனை ஆற்றில் பயணித்து, செங்கோட்டையின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முழு வெள்ளியால் ஆன கதவைத் திறந்து அரண்மனைக்குள் பிரவேசித்தார். நகரம் முழுவதும் ஆரவாரம், வாணவேடிக்கைகள், உற்சாகம் என்று கரை புரண்டு ஓடியது. புதிய அரண்மனையில் சக்கரவர்த்தி குடிபெயர்ந்ததை பத்து நாட்கள் மிகப்பெரிய திருவிழாவாக மக்கள் கொண்டாடினார்கள். ஊர்வலம், நாடகம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் என்று (பழைய) டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டது. இப்படியாகத்தான் இந்தியாவின் புதிய தலைநகரம் பிறப்பெடுத்தது.

Next Story