மகிழ்ச்சிப்படுத்தும் ஹார்மோன்கள்
மகிழ்ச்சியான மனநிலைக் கும், உடல் ஆரோக்கியத்துக்கும் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது.
மகிழ்ச்சியான மனநிலைக் கும், உடல் ஆரோக்கியத்துக்கும் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. கவலை, கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாத்து கொள்வதிலும் ஹார்மோன்களின் செயல்பாடு அடங்கி இருக்கிறது. அத்தகைய ஹார்மோன் சுரப்பிகளின் இயக் கம் சீராக இருந்தால் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். ஹார்மோன்கள் சுரப்பிகளின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது நோய் பாதிப்புகளும், மனநல பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கு உணவு பழக்கவழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சீர்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் சேர்க் கும் உணவுவகைகள் குறித்து பார்ப்போம்.
* ஆப்பிள் பழம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். பெண்களுக்கு தேவைக்கு அதிகமாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப் படுத்தி உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும். ஆதலால் பெண்கள் அன்றாட உணவு பழக்கவழக்கத்தில் ஆப்பிள் பழத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும்.
* ஹார்மோன்கள் அளவை சீராக்குவதற்கு ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கொழுப்பு அமிலம் உடலிலுள்ள கொழுப்பின் அளவை ஒழுங்குபடுத்தி ஹார்மோன்கள் சீராக சுரக்க வழிவகுக்கும்.
* பாதாமில் நார்சத்து, புரோட்டின் மற்றும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை நீரிலோ, பாலிலோ ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். அது கார்போஹைட்ரேட், ஹார்மோன்கள் மற்றும் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும்.
* கோதுமை உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் வைட்டமின் பி பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை வரைமுறைப்படுத்தி ஆரோக்கியம் காக்கும். கைக்குத்தல் அரிசியையும் சாப்பிட்டு வரலாம்.
* மீன் உணவுகளையும் சாப்பிட்டு வர வேண்டும். அதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மாத விடாய் சமயங்களில் பெண்களின் உடல் நலத்திற்கு வலு சேர்க்கும்.
* ஓட்ஸ் உணவுகளையும் பயன்படுத்துங்கள். அதில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் இ, புரோட்டீன், நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ஹார்மோன் களின் இயக்கமும் சீராக இருக்கும்.

Next Story