தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் மண்எண்ணெய் கேன்களுடன் வந்ததால் பரபரப்பு
டாஸ்மாக கடையை மூடககோரி பொதுமககள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணாபுரம்,
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு டாஸ்மாக கடைகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் பொதுமககளுககு இடையூறாக உள்ள டாஸ்மாக கடையை மூட வலியுறுத்தி பொதுமககள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தண்டராம்பட்டு தாலுகா கோவிந்தராஜபுரத்தில் தானிப்பாடி சாலை பஸ் நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக கடை உள்ளது. இந்த டாஸ்மாக கடைககு வரும் குடிமகன்கள் அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும், பெண்களையும் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த டாஸ்மாக கடையை மூடககோரி நேற்று காலை 12 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் மண்எண்ணெய் கேன்களுடன வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைஇதனையடுத்து சம்பவ இடத்துக்கு தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெகடர் மதியரசன், தானிப்பாடி சப்–இன்ஸ்பெகடர் சிவசங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத பொதுமககள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தண்டராம்பட்டு தாசில்தார் சஜேஸ்பாபு, வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷம்ஷாத்பேகம், கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டாஸ்மாக கடையை மாற்ற நடவடிககை எடுககப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்த சென்றனர். இதனால் 2 மணி நேரத்திற்கும மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.