டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் மீண்டும் சாலைமறியல்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் மீண்டும் சாலைமறியல்
x
தினத்தந்தி 3 April 2017 3:45 AM IST (Updated: 2 April 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள 14 கடைகளை மூடும்படி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து 13 கடைகள் மூடப்பட்டன.

மேலூர்,

மேலூர் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள 14 கடைகளை மூடும்படி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து 13 கடைகள் மூடப்பட்டன. ஆனால் நத்தம்சாலையில் மேலவளவில் உள்ள கடை மட்டும் மூடப்படவில்லை. நேற்றுமுன்தினம் இக்கடையை மூட வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி கூறினர்.

இந்தநிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடை எண் அழிக்கப்பட்டு காணப்பட்ட நிலையில் திடீரென மாலை கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அழகாபுரிபட்டி விலக்கில் மீண்டும் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் தமிழ்செல்வியிடம், கிராம மக்கள் சார்பில் கடையை அகற்ற வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story