குமாரபாளையம் அருகே இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் வாலிபர் கைது


குமாரபாளையம் அருகே இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 April 2017 3:00 AM IST (Updated: 2 April 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் அடுத்த ஆயிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் அடுத்த ஆயிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது மகன் கார்த்திகேயன்(வயது26). குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை அருந்ததியர் காலனியை சேர்ந்த 14 வயது மாணவி 8–ம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகேயனுக்கும் அவரது உறவினரான 14 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று(திங்கட்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த இளம்வயது திருமணம் குறித்து பல்லக்காபாளையம் கிராமநிர்வாக அதிகாரி(பொறுப்பு) முருகனுக்கு தகவல் கிடைத்தது. எனவே அவர் இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு புகார் கொடுத்தார். அதையொட்டி போலீசார் விரைந்து சென்று இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுதொடர்பாக கார்த்திகேயன், அவரது தாயார் ராஜம்மாள், மாணவியின் தந்தை, தாயார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story