அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறி சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மதுரை–தேனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தப்பட்டதாக ஆண்டிப்பட்டி போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் சண்முகசுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story