மீஞ்சூர் அருகே போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் வழங்கினார்


மீஞ்சூர் அருகே போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 April 2017 11:00 PM GMT (Updated: 2 April 2017 7:52 PM GMT)

மீஞ்சூரை அடுத்த மணலிபுதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த மணலிபுதுநகரில் தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பேசினார்.

முகாமில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், பொது சுகாதாரம் நோய் தடுப்புத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் செங்குட்டுவன், துணைஇயக்குனர் பிரபாகரன், சப்–கலெக்டர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story