சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: 30 பேருக்கு வாந்தி–மயக்கம்


சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: 30 பேருக்கு வாந்தி–மயக்கம்
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 3 April 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: 30 பேருக்கு வாந்தி–மயக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டி ஊராட்சி கருப்பத்தேவனூரில் 150–க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீரை மேல்நிலை தொட்டியிலும், சிறிய குடிநீர் தொட்டியிலும் சேகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து, 4 மாதங்கள் ஆகி விட்டதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றன. மேலும் சிறிய குடிநீர் தொட்டி உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரை குடித்த அப்பகுதியை சேர்ந்த கருப்பத்தேவனூரை சேர்ந்த சேகர் (வயது 30), சரண்யா (10), வினோதா (19), 30 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story