தஞ்சை பள்ளியக்ரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவில் பங்குனி விழா
தஞ்சை பள்ளியக்ரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவில் பங்குனி விழா திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்
தஞ்சாவூர்,
தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள பள்ளியக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற சிறைகாத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி விழாவையொட்டி பாலாபிஷேகம் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு பங்குனி விழாவையொட்டி நேற்று சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தாவிற்கும், உதிரகருப்பண்ண சாமி, விநாயகர், காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு வடகரையில் உள்ள தளிகேஸ்வர சாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலம், பள்ளியக்ரஹாரம் வடக்குதெரு, தெற்குதெரு, நடுத்தெரு, கடைத்தெரு, பஞ்சநாதன் பிள்ளை தெரு மற்றும் பள்ளியக்ரஹாரம் பிரதான சாலை வழியாக வந்து கோவிலை சென்றடைந்தது. மேலும் பக்தர்கள் அலகு குத்தி காவடியும் எடுத்துவந்தனர். இதில் திரளான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் 6 மணியளவில் சிறப்பு பூஜையும், 7 மணியளவில் சாமி அலங்காரத்துடன் வீதி உலாவும் நடைபெற் றன. நாளை (செவ்வாய்க் கிழமை) மதியம் விடையாற்றி விழா நடக்கிறது.

Next Story